மாவை சோனதிராஜாவின் முறையற்ற நடவடிக்கைகளால் தான் கட்சிக்குள்ளே குழப்பங்கள் ஏற்பட்டு கட்சிக்கு அவப்பெயர் வெளியில் உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (29) மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை தமிழரசுக் கட்சி எதிர்வரும் சில நாட்களில் 75 ஆவது பவள விழாவை கொண்டாடவுள்ளது.
இவ்வாறான, மூத்த பழம் பெறும் கட்சியை கடந்த சில வருடங்களாக நடவற்றை வைத்துகொண்டு வெளியில் செயதிகள் பிரசுரிக்கப்படுகின்றது.
கட்சியை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது கட்சியில் எவ்வித குழப்பமும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/LsiIqxEArMc