Home இலங்கை பொருளாதாரம் கச்சா எண்ணெய் விலை மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்

கச்சா எண்ணெய் விலை மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் இறக்குமதி பொருட்கள் மீது 25% வரியை விதித்துள்ளதால் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய இரண்டு நாடுகளும் அமெரிக்காவிற்கு கச்சா எண்ணெயை வழங்கும் இரண்டு முக்கிய வழங்குனர்களாக கருதப்படுகின்றன.

எவ்வாறாயினும், குறித்த இரண்டு நாடுகளுடனும் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்க மேற்கொண்டுள்ளதன் காரணமாக எண்ணெய் விலைகள் தற்போதைக்கு ஓரளவு நிலையாகி இருப்பதாக பொருளியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

கச்சா எண்ணெயின் விலை

இதேவேளை, சீனா மீது அமெரிக்க 10% வரியை நடைமுறைப்படுத்தியதையடுத்து, அமெரிக்க கச்சா எண்ணெயின் விலை 2% குறைவடைந்துள்ளது.

இதற்கமைய, ஒரு பீப்பாய் அமெரிக்க கச்சா எண்ணெயின் விலை 72 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவான விலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், கச்சா எண்ணெயின் விலை குறைவு நிரந்தரமானதாக இருப்பது சந்தேகமே என பொருளியல் வல்லுநர்கள் கூறியுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version