Home இலங்கை அரசியல் ருவாண்டா உயர் ஸ்தானிகர்- பிரதமர் இடையே விசேட கலந்துரையாடல்

ருவாண்டா உயர் ஸ்தானிகர்- பிரதமர் இடையே விசேட கலந்துரையாடல்

0

இலங்கைக்கான ருவாண்டா (Rwanda) குடியரசின் உயர் ஸ்தானிகர் ஜாக்குலின் முகங்கிரா பிரதமர் ஹரிணி ஹமரசூரியவை (Harini Amarasuriya) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலந்துரையாடலானது நேற்று (3) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் முக்கிய துறைகளில் பரஸ்பர நலன்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார உறவு

இந்தநிலையில், இலங்கையுடன் வலுவான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை தொடர்ச்சியாக பேணுவதற்கு ருவாண்டா எதிர்பார்ப்பதாக உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார்.

மேலும் ,இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை விரிவுபடுத்த இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version