Home உலகம் சுவிஸ் நாட்டில் பெப்ரவரி மாதம் முதல் நடைமுறையாகும் முக்கிய சட்டங்கள்!

சுவிஸ் நாட்டில் பெப்ரவரி மாதம் முதல் நடைமுறையாகும் முக்கிய சட்டங்கள்!

0

சுவிட்சர்லாந்தில் (Switzerland) பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல், சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பெப்ரவரி மாத ஆரம்பம் முதல், பிறந்து 15 வாரங்கள் ஆகாத நாய்க்குட்டிகளை வியாபார நோக்கில் சுவிட்சர்லாந்துக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல், விருந்தோம்பல் துறையில் பணி புரிவோருக்கான குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட உள்ளது.

தொழிற்பயிற்சி

தொழிற்பயிற்சி பெறாத பணியாளர்களுக்கான ஊதியம் 3666 சுவிஸ் ஃப்ராங்குகளிலிருந்து மாதம் ஒன்றிற்கு 3706 சுவிஸ் ஃப்ராங்குகளாக அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்படி ஃபெடரல் சான்றிதழ் பெற்றவர்களுக்கான ஊதியம் 4470 சுவிஸ் ஃப்ராங்குகளிலிருந்து 4519 சுவிஸ் ஃப்ராங்குகளாக உயர இருக்கிறது.

மேலும் சுவிஸ் சர்வதேச விமான நிறுவனமான Swiss நிறுவனம், பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல், மீண்டும் டெல் அவிவ் நகருக்கு விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

NO COMMENTS

Exit mobile version