Home இலங்கை அரசியல் சனல் 4 இன் பின்னணியில் புதிய அரசில் உள்ள முக்கிய அதிகாரி: கம்மன்பில பகிரங்கம்

சனல் 4 இன் பின்னணியில் புதிய அரசில் உள்ள முக்கிய அதிகாரி: கம்மன்பில பகிரங்கம்

0

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சனல் 4 வழங்கிய சர்ச்சைக்குரிய அறிக்கைக்கு தற்போதைய அரசாங்கத்தில் அதிகாரம் செலுத்தும் அதிகாரி ஒருவர் ஆதரவளித்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமிய தலைவர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம் குழு அறிக்கையை வெளியிடுவதற்காக இன்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அதன் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, அவர் ஒரு முன்னாள் சி.ஐ.டி அதிகாரி, அந்த தேசத்துரோக அதிகாரிக்கு இந்த அரசாங்கத்தால் நாட்டில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சவால்

அந்த நபர் இந்த நாட்டில் அதிகாரம் மிக்க பதவியில் இருப்பாராயின் அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்கி தண்டிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு.

நாங்கள் அரசுக்கு சவால் விடுகிறோம்.

முடிந்தால், இந்த முகத்தை மறைத்து, அதிகாரியைத் தேட ஒரு குழுவை அனுப்புங்கள்.” என்றார்.  

NO COMMENTS

Exit mobile version