Home இலங்கை சமூகம் 2024 நாடாளுமன்ற தேர்தல்: ஆயத்த பணிகள் தீவிரம்

2024 நாடாளுமன்ற தேர்தல்: ஆயத்த பணிகள் தீவிரம்

0

நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், 2,034 நிலையங்கள் வாக்கு எண்ணும் நிலையங்களாக செயற்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு (Colombo) மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 1,765,351 வாக்காளர்களுக்கு வசதியாக 1,204 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.

மன்னார் மாவட்டம்

ஆகக் கூடுதலாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட கம்பஹா (Gampaha) மாவட்டத்தில் 1,212 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதோடு, இம்மாவட்டத்தில் 1,881,129 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

களுத்துறை (Kalutara) மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 1,024,240 வாக்காளர்களுக்காக 735 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட உள்ளன.

மன்னார் (Mannar) மாவட்டத்தில் 90,607 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளதுடன், அவ்வாக்காளர்களுக்காக 108 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

நாடளாவிய வாக்களிப்பு நிலையங்கள்

இத்தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், 2,034 நிலையங்கள் வாக்கு எண்ணும் நிலையங்களாக செயற்படவுள்ளன.

இவ்வருட நாடாளுமன்றத் தேர்தலில் 17,430,354 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version