Home இலங்கை அரசியல் யாழ்.சாவகச்சேரி சமுர்த்தி வங்கி அமைவிட விவகாரம் : களத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ்

யாழ்.சாவகச்சேரி சமுர்த்தி வங்கி அமைவிட விவகாரம் : களத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ்

0

யாழ்ப்பாண (Jaffna) சாவகச்சேரி பிரதேச சமுர்த்தி வங்கிக்கு நகரப்பகுதியில் ஒர் இடத்தினை
வழங்குவதில் பிரதேச செயலகம் மற்றும் நகர சபைகளுக்கு இடையே நீண்ட காலமாக
நிலவும் இழுபறி நிலைக்கு தீர்வுகாணும் வகையில் குறித்த அமைவிடத்துக்கு
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) கள விஜயம் மேற்கொண்டுள்ளார். 

பிரச்சினைக்கான தீர்வை மையப்படுத்தியும் பொது மக்களுக்கு ஓர் இலகுவான சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற
நிலைப்பாட்டின் அடிப்படையிலும்  அமைச்சரின் இந்த நேரடி கள விஜயம்
இடம்பெற்றுள்ளது.

இந்த விஜயத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீபன் , மாவட்டத்தின் சமுர்த்தி
பணிப்பாளர் சத்தியசோதி, கூட்டுறவு ஆணையாளர் தேவனந்தினி பாபு, உள்ளுராட்சி உதவி
ஆணையாளர் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளர் , நகர மற்றும் பிரதேச சபை
செயலாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டமை
குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சீர்திருத்த வேகத்தை உறுதிப்படுத்த வலியுறுத்தும் ஐ.எம்.எப்

ஒப்பந்தங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றியது : சிங்களவர்களிடம் இரந்து கேட்பது உரிமை அல்ல

ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல்: வேகமாக உயரும் மசகு எண்ணெய்யின் விலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  

NO COMMENTS

Exit mobile version