Home சினிமா மனைவியை அடித்து கொடுமை படுத்தி சிறைக்கு சென்ற நடிகர்.. பிக் பாஸ் 8ல் நுழைகிறாரா? யார்...

மனைவியை அடித்து கொடுமை படுத்தி சிறைக்கு சென்ற நடிகர்.. பிக் பாஸ் 8ல் நுழைகிறாரா? யார் பாருங்க

0

விஜய் டிவியின் பிக் பாஸ் 8ம் சீசன் இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. தொகுப்பாளர் விஜய் சேதுபதிக்கு மக்கள் அட்வைஸ் செய்வது போல சமீபத்தில் வெளியான போஸ்டருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என தினமும் பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது.

அர்னாவ்

விஜய் டிவியின் செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் அர்னாவ். அந்த தொடர் இந்த வாரத்தோடு நிறைவு பெறும் நிலையில், அடுத்து அர்னாவ் பிக் பாஸ் போட்டியாளராக நுழைய இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது.

அதே சீரியல் ஹீரோயின் அக்ஷிதாவும் பிக் பாஸ் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை

நடிகர் அர்னாவ் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். அவர் காதல் மனைவி நடிகை திவ்யா ஸ்ரீதர் என்பவரை கர்ப்பமாக்கிவிட்டு வேறொரு பெண் உடன் சென்று விட்டார் என்றும், கர்ப்பமாக இருக்கும் மனைவியை அடித்து உதைத்து காயப்படுத்தியதாக அவர் மனைவி திவ்யா ஸ்ரீதர் வீடியோ வெளியிட்டு புகார் கூறினார்.

போலீசில் புகார் அளிக்கப்பட்டு அர்னாவ் கைதாகி அதன் பின் ஜாமினில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு சர்ச்சைகளில் சிக்கிய அர்னாவ் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதால் ஷோ எப்படி இருக்குமோ என தற்போதே பேச்சு எழுந்திருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version