Home முக்கியச் செய்திகள் கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வெளியான தகவல்

கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வெளியான தகவல்

0

சந்தையில் கோழி இறைச்சியின் விலை தற்போது படிப்படியாக அதிகரித்து வருவதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜெயசேகர(Madali Jayasekara) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றையதினம்(08.03.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடளாவிய ரீதியில் எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை அதிகரிக்கும்.

கோழி இறைச்சி  – முட்டை விலை 

அத்துடன் கோழித் தீவன பற்றாக்குறையால் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை அதிகரித்து வருகின்றது.” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் தட்டுப்பாடு காரணமாக பல உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version