Home சினிமா தக் லைஃப் படத்தை தொடர்ந்து கமல்ஹாசனின் 237-வது படம் குறித்து வெளிவந்த அதிரடி அப்டேட்.. என்ன...

தக் லைஃப் படத்தை தொடர்ந்து கமல்ஹாசனின் 237-வது படம் குறித்து வெளிவந்த அதிரடி அப்டேட்.. என்ன தெரியுமா?

0

கமல்ஹாசன்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இருப்பினும் உலகநாயகன் பட்டமே வேண்டாம் என அவர் சமீபத்தில் அறிவித்து விட்டார்.

இவர் நடிப்பில் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளிவந்தது. ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.

கமல்ஹாசன் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து, தனது 237-வது படத்தில் பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

நடிகை கயாடு லோஹருக்கு பிரபலம் கொடுத்த கிஃப்ட்.. வைரலாகும் வீடியோ

அதிரடி அப்டேட்

இந்நிலையில், கமலின் 237-வது படத்தின் மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, அதாவது, ஆக்சன் கதைக்களத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் பிரீ புரொடக்சன் வேலைகள் தீவிரமாக தற்போது நடைபெற்று வருகிறதாம்.

அந்த வகையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இம்மாத இறுதியில் சென்னையில் துவங்கலாம் என்று கூறப்படுகிறது. 

    

NO COMMENTS

Exit mobile version