கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல பிரதேசங்களில் உள்ள கோழிப்பண்ணைகள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து, இறந்த கோழிகளில் இருந்து கோழி இறைச்சியை சுத்தம் செய்து சந்தைக்கு வெளியிடும் மோசடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இறந்த கோழிகள் பக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், இது தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் சேவை அதிகார சபையின் பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் அஜித் ஜயசுந்தர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! ரணிலை ஆதரிப்பதற்காக புதிய அரசியல் கூட்டணி
குறைந்த விலையில்
சாதாரண ஆரோக்கியமான கோழி இறைச்சி வெள்ளை நிறத்திலும், வெள்ளத்தில் இறந்த கோழிகளின் இறைச்சி சிவப்பு நிறத்திலும் இருப்பதால் நுகர்வோர் அவற்றை அடையாளம் காண முடியும் என்று ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக கோழி இறைச்சியின் நிறம் தொடர்பில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும், ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் இவ்வாறான கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மொட்டு கட்சியுடனான இரகசிய சந்திப்பு! வதந்திகளை நிராகரிக்கும் சம்பிக்க ரணவக்க
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |