Home இலங்கை சமூகம் கடற்றொழிலாளர்களின் மனநிலை அறியாது முன்னெடுக்கப்படும் சீனாவின் உதவி திட்டங்கள்

கடற்றொழிலாளர்களின் மனநிலை அறியாது முன்னெடுக்கப்படும் சீனாவின் உதவி திட்டங்கள்

0

சீனாவின் உதவி திட்டங்கள் கடற்றொழிலாளர்களின் மனநிலை அறியாது
முன்னெடுக்கப்படுகின்றதாகவும் மக்களுக்கு ஏற்ற திட்டங்களை கருத்தறிந்து
முன்னெடுக்குமாறும் யாழ் சுழிபுரம் திருவடிநிலை கெங்காதேவி கடற்றொழிலாளர்
கூட்டுறவு சங்கத்தின் தலைவர் செல்லன் தெய்வேந்திரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவடிநிலை பகுதியில் அமைந்துள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் ஊடக
சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.

சீன பொருத்து வீட்டு திட்டம் 

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,  சீன தேசத்திலிருந்து உதவி திட்டங்கள் வருவதாக அறியக்கூடியதாக இருக்கின்றது. இந்த பொருத்து வீட்டு திட்டம் தொடர்பில் தற்பொழுது வடக்கு கிழக்கில் பெரிதும்
பேசப்படுகிறது. கடற்கரைகாற்று உவர் நீருக்கு வெகுவாக அழிவடையும். 

இந்தத்
திட்டத்தினை பெரும்பாலும் எமது பிரதேசத்தவர்கள் தொழிலாளர்கள் முற்று முழுதாக
நிராகரித்துள்ளார்கள். ஆகவே இந்த கரையோரத்துக்கு ஏற்ற திட்டங்கள்
நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மேலும் சீன தேசத்தின் உணவு திட்டம் தொடர்பிலும் தற்பொழுது பேசப்படுகிறது.

இலங்கையிலே வடக்கு கிழக்கில் உற்பத்தி செய்யப்படுகின்ற சுதேச அரிசி வகைகளை
தான் நாங்கள் இவ்வளவு காலமும் உண்டு வருகின்றோம்.

ஆகவே இங்கே உற்பத்தி
செய்யப்படுகின்ற அரிசியை கொள்வனவு செய்து வழங்குவதன் மூலம் இருதரப்பு நன்மை
கிடைக்கப் பெறுகின்றது.கடற்றொழிலாளர்களும் நன்மையடைவதோடு மேலும் விவசாயிகளும் நன்மை
அடைவர். எங்களுடைய அரிசியை சாப்பிட்டுவிட்டு வெளிநாட்டு அரிசியை உண்டு விட்டு
நாங்கள் செல்வோம் ஆனால் கடற்தொழிலில் சரியான முறையில் ஈடுபட முடியாது.

சீன கடலட்டை பண்ணை

எங்களுடைய நாட்டு அரிசியே வழங்கப்பட வேண்டும்

சீன அரிசி மற்றும் பல திட்டங்கள் வருகின்றது எனக் கூறப்படுகிறது.

ஆனால் இதுவரை
எமக்கு கிடைத்தது போல தெரியவில்லை.
எமது கடற்தொழிலாளர்கள் எம்மை கேள்வி கேட்கின்ற அளவுக்கு இந்த திட்டங்கள்
யாருக்கு செல்லுகின்றது என நமக்கு தெரியவில்லை. பதிவுகளைப் பெற்றீர்கள் அங்கே
திட்டங்கள் என மக்கள் தொழிலாளர்கள் எம்மை கேள்வி கேட்கின்றார்கள்.

நாங்களும்
எமது சங்க உறுப்பினர்களை மனதளவிலே வருகின்றது என்ற வார்த்தையினை
தெரிவித்துள்ளோம்.

ஆகவே இந்த கடற்தொழில் அதிகாரிகள் இவ்வாறு இதற்கு செயற்பட வேண்டுமோ
அதனடிப்படையில் செயற்பட்டு
எமக்கு தேவையானதை நிறைவேற்ற வேண்டும். சீன தேசத்தின் உதவிகளை வரவேற்கின்றோம்.
ஆனால் முறையாக மக்களின் கருத்தறிந்து இந்த திட்டங்கள் பெற வேண்டும்.

இதேவேளை சீன கடலட்டை பண்ணை எமது பிரதேசத்தில் முன்னெடுக்க முடியாது
நீரோட்டங்கள் காற்று மற்றும் திடீர் அனர்த்தங்களின் பொழுது இது அடித்துச்
செல்லப்பட்டு விடும் நீரோடாத பிரதேசத்தில் இது பொருத்தமானதாக இருக்கும்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் சில முன்னெடுக்கப்படுவதாக அறிகின்றோம்.

இது
தொடர்பில் ஆராய்ந்து எமது பிரதேசத்திற்கு பொருத்தமான விடயங்களை முன்னெடுக்க
வேண்டும். மக்களுக்காக தேவையான திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டுமே தவிர
எதையும் நிவாரணமாக கிடைக்கின்றது என்பதற்காக மக்கள் நலன் அறியாது
முன்னெடுக்ககூடாது என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version