Home இலங்கை சமூகம் இலங்கையில் பொருளாதார நெருக்கடி: செல்வாக்கு செலுத்தும் உள்நாட்டு யுத்தம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி: செல்வாக்கு செலுத்தும் உள்நாட்டு யுத்தம்

0

வெளிநாட்டு பணத்தின் பற்றாக்குறைதான் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என
கொழும்பு பல்கலைக்கழக ரோசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

லங்கா சிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“ இலங்கையின் (Sri lanka)  ரூபாவின் பெறுமதி தற்போதைக்கு உயர்வு நிலையில் இருந்தாலும், மத்திய வங்கி கடன் கொடுக்க தொடங்கும் போது குறைய வாய்ப்புள்ளது.

2008 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பிறகு தான் இறக்குமதிகள் கடுமையாக அதிகரிக்கின்றன.ஏற்றுமதிகள் அதிகரிக்கவில்லை எனவே வெளிநாடுகளில் வர்த்தக கடன் பெற வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

2022 ஆம் அளவில் கடன் பற்றாக்குறை அதிகமாகி இலங்கையால் அதிலிருந்து நகர முடியவில்லை.

இலங்கையின் மிகப்பெரிய பொருளாதார பிரச்சினை உள்வரும் வெளிநாட்டு செலாவணி குறைவாகவும் வெளியெ செல்வது அதிகமாகவும் இருப்பது.

இந்த பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு காணாத வரை பொருளாதார நெருக்கடி தீராது.” என்றார்.

இலங்கையில் பொருளாதாரம் சிதைவடைந்ததில் உள்நாட்டு யுத்தம் பிரதான இடம் வகிக்கின்றது.

இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு….

https://www.youtube.com/embed/iyIU2o3mhHo

NO COMMENTS

Exit mobile version