Home உலகம் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட முதல் பத்து நாடுகள் : முதலிடம் பிடித்த நாடு...

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட முதல் பத்து நாடுகள் : முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா

0

இன்று உலக மக்கள் தொகை தினம்.

மக்கள் தொகை பிரச்சினை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 1989-ம் ஆண்டு முதல் ஜூலை 11-ம் திகதி உலக மக்கள் தொகை தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 35-வது மக்கள்தொகை தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நாளின் முக்கியத்துவம்

குடும்பக் கட்டுப்பாடு, பாலின சமத்துவம், பிரசவ காலத்தில் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது. சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கும், தீர்வுகளை கொண்டு வருவதற்கும், நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் தரவுகளை சேகரிப்பதில் அக்கறை காட்டவேண்டியது அவசியம் என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள் உணர்த்துகிறது.

மக்கள் தொகையில் முதலிடம் வகித்த சீனாவை கடந்த ஆண்டு பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்துக்கு வந்தது.

இந்தியாவின் மக்கள்தொகை 

இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 142.86 கோடி எனவும் சீனாவின் மக்கள்தொகை 142.57 கோடி எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

இந்தியா- 144.17 கோடி,2. சீனா – 142.51 கோடி,அமெரிக்கா – 34.15 கோடி, இந்தோனேசியா – 27.97 கோடி,பாகிஸ்தான் – 24.52 கோடி,நைஜீரியா – 22.91 கோடி, பிரேசில் – 21.76 கோடி, வங்காளதேசம் – 17.47 கோடி,ரஷ்யா – 14.39 கோடி,எத்தியோப்பியா – 12.97 கோடி

NO COMMENTS

Exit mobile version