இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கும் பொருளாதார சவால்களை எதிர்நோக்குவதற்கும் பூரண ஆதரவு வழங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான சீனத்தூதுவர் ஸீ ஷென்ஹெரங் இந்த உறுதிமொழியை பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் வழங்கியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி நிலைமையை வெற்றிகொள்ள இலங்கை எடுத்து வரும் முயற்சிகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் ஈழத்தமிழர்களின் தாயக தலையீட்டை தடுக்க புது வியூகம்
இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை
பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் பிரதமரின் சீன விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைகளை விரைவில் நடைமுறைப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
லண்டன் சென்ற விமானத்தில் குழப்பம் – மன்னிப்புக் கோரிய ஸ்ரீலங்கன் விமான சேவை
ரஷ்ய இராணுவத்தில் அதிக சம்பளம்: கடத்தல்காரர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாமென எச்சரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |