இலங்கையில் டித்வா சூறாவளியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீன அரசாங்கம் வழங்கிய உதவி மற்றும் ஆதரவுக்கு ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தனது நன்றியை தெரிவித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவும், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட ஜே.வி.பி. தலைவர்கள் குழுவும் நேற்று (24.12.2025) பிற்பகல் கட்சி தலைமையகத்தில் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.
இதன்போது, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அரசியல் நிலைமை
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி 2025 இல் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
எதிர்வரும் ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வளர்ப்பதற்கான தேவை மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் இரு தரப்பினரும் இதன்போது கலந்துரையாடினர்.
இதன்போது, மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி,தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துந்நெத்தி, வர்த்தகம், வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
