Home முக்கியச் செய்திகள் 23 பற்களையும் பிடுங்கிய மருத்துவர்கள்: மாரடைப்பால் பறிபோன உயிர்

23 பற்களையும் பிடுங்கிய மருத்துவர்கள்: மாரடைப்பால் பறிபோன உயிர்

0

சீனாவில் (China) ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சீனாவின் ஜெய்ஜியாங் ஜின்ஹுவா (Jinhua) நகரில் உள்ள யோங்காங் டேவே பல் மருத்துவமனையில் கடந்த ஒகஸ்ட் 19 ஆம் திகதி ஹூவாங் (Huang) என்ற நபருக்கு மாற்று பற்கள் பொருத்தும் இம்பிளான்ட் அறுவை சிகிச்சையானது நடத்தப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சையின்போது அவரின் 23 பற்களும் பிடுங்கப்பட்டு அதே நாளில் 12 புதிய பற்கள் இம்மீடியேட் ரெஸ்டோரேஷன்  (Immediate restoration) முறையில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவர் இரண்டு வாரங்கள் கழித்து திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஒரே நாளில் 10 பற்கள் பிடுங்கப்படுவதே அதிகம் என்று பல் மருத்துவர்கள் தங்களின் அபிப்பிராயங்களைக் கூறி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version