பிரபல பின்னணிப் பாடகர் மனோ. தமிழ், தெலுங்கு, பெங்காளி, கன்னடம், மலையாளம், ஒரியா, ஹிந்தி என பல மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் மேலான பல பாடல்களை பாடியிருக்கிறார்.
இந்த நிலையில் மனோவின் மகன் ரஃபி மனோ நேற்றுஇரவு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பாடு வாங்க வந்த 16 வயது சிறுவன் மற்றும் 20 வயது இளைஞரை முட்டி போட வைத்து தாக்கியதாக சொல்லப்படுகிறது.
தாக்குதல்
இந்த தாக்குதலால் அந்த 16 வயது சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கூறி மனோவின் மகன்கள் ரஃபி மனோ, சாஹிர் மற்றும் அவரது வீட்டில் பணியாற்றும் இருவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போலீசார் மனோ வீட்டில் பணியாற்றும் இருவரை தற்போது கைது செய்து இருக்கும் நிலையில் மனோவின் மகன்கள் இருவரிடம் விசாரனை நடத்தி இருக்கின்றனர்.