கண்டியில்(kandy) அமைந்துள்ள தலதா மாளிகையை சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு வலய பகுதிகளை அனுமதியின்றி ட்ரோனைப் பயன்படுத்தி காணொளி காட்சிகளை எடுக்க முயன்றதாக கூறப்படும் சீன நாட்டவர் ஒருவர் சிறி தலதா மாளிகை காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையின் கூற்றுப்படி, 48 வயதான சீன நாட்டவர் நேற்று (15) மாலை 7:00 மணியளவில் தியவதான நிலமேவின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு அருகில் இருந்து ட்ரோனை ஏவினார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்
சிறி தலதா மாளிகை மீது பறந்த ட்ரோன், ஜாமர் கருவிகளைப் பயன்படுத்தி விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
மேலும் விசாரணைக்காக, சீன நாட்டவரும் ட்ரோனும் சிறி தலதா மாளிகை காவல்துறையினரால் கண்டி சுற்றுலா காவல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
