ஐக்கிய மக்கள் சக்தியின் பலவீனமான தொகுதி அமைப்பாளர்களுக்கு பதிலாக புதிய
அமைப்பாளர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வாரம்
அது கூடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய நியமனங்கள்
தேர்தலின் போது செயல்திறன் குறைவு, அமைப்பு நடவடிக்கைகள் இல்லாமை மற்றும்
வாக்குகள் குறைவதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு புதிய
நியமனங்கள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வெற்றிடமுள்ள தொகுதிகளுக்கும் புதிய அமைப்பாளர்கள்
நியமிக்கப்படுவார்கள் என்று ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.
