காலி சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
குறித்த மோதல் சம்பவமானது, இன்று (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
நால்வர் காயம்
இந்நிலையில், காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் தற்போது வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கோண்டு வருகின்றனர்.
