Home இலங்கை குற்றம் கடத்தல் எரிபொருளுடன் கப்பல் ஒன்றை கைப்பற்றிய ஈரான்.. இலங்கையர்களும் கைது

கடத்தல் எரிபொருளுடன் கப்பல் ஒன்றை கைப்பற்றிய ஈரான்.. இலங்கையர்களும் கைது

0

கடத்தப்பட்ட எரிபொருட்களுடன், ஓமன் வளைகுடாவில் ஒரு எண்ணெய் கப்பலை ஈரான்
கைப்பற்றியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேi~ சேர்ந்த 18 பணியாளர்கள் கைது
செய்யப்பட்டதாகவும் அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

 ஈரானிய படைகள்

கைப்பற்றப்பட்டதை அடுத்து சுமார் ஆறு மில்லியன் லிட்டர் கடத்தல் டீசல்
எரிபொருளுடன் குறித்த எண்ணெய் கப்பல் ஓமன் கடலின் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கப்பல் செல்லக்கூடிய அனைத்து அமைப்புக்களும் மூடப்பட்டுள்ளன.

தகவல்களின்படி, வளைகுடாவில் சட்டவிரோதமாக எரிபொருளை கொண்டு சென்றதாக கூறியே
இந்த கப்பலை ஈரானிய படைகள் இடைமறித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் சில்லறை எரிபொருள் விலை உலகிலேயே மிகக் குறைவு என்பதன் காரணமாக மற்ற
நாடுகளுக்கு அதை கடத்துவது குறிப்பாக லாபகரமானது என்று கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version