Home உலகம் ஹமாஸின் முக்கிய ஆயுதத் தலைவர் காசாவில் படுகொலை…!

ஹமாஸின் முக்கிய ஆயுதத் தலைவர் காசாவில் படுகொலை…!

0

காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயத்தை இஸ்ரேலிய படைகள் தெரிவித்துள்ளன.

உற்பத்திப் படை

காசா நகரில் ஒரு கார் மீது நடத்திய தாக்குதலின் போது அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   

இந்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 25 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு மூத்த ஹமாஸ் தளபதியை குறிவைத்ததில் இது மிக உயர்ந்த படுகொலையாக இருக்கும் என்று கருதப்படுகின்றது.

சயீத் ஹமாஸின் ஆயுத உற்பத்திப் படையின் தலைவர் என்று இஸ்ரேலிய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

ஹமாஸின் காசா நகர படைகளுக்கு சயீத்தே தலைமை தாங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version