Home இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அநுர ஏற்படுத்திய மாற்றம்

வரலாற்றில் முதல் முறையாக அநுர ஏற்படுத்திய மாற்றம்

0

இலங்கைத் தீவிலே ஏராளமான மாற்றங்கள் நாளாந்தம் தேவைப்படுகின்றன. அந்தவகையிலே, ஆட்சிக்கு வரும் முன்னர் கூறிய விடயங்களை தற்போது செயற்படுத்திய வேண்டிய பொறுப்பில் அநுர அரசாங்கம் உள்ளது.

நாட்டில் தேர்தல்கள் முடிவடைந்து குறித்த காலத்தை கடந்து விட்ட நிலையில் மாற்றத்தை மக்கள் வேண்டி நிற்கின்றார்கள்.

இவ்வாறு மக்கள் வேண்டி நிற்கும் மாற்றத்தின் முதற்கட்டமாகத்தான் கிளீன் சிறீலங்கா செயற்றிட்டம் உள்ளது.

இந்த செயற்றிட்டம் ஒரு கோஷமாக கருதப்பட்டாலும் அதனுடைய உள்ளடக்கங்கள், முன்னெடுப்புக்கள் எவ்வாறு இருக்கின்றது என்பதை பார்க்க வேண்டிய தேவை உள்ளது.

குறிப்பாக, இதை விரிவாக பார்க்கப்போனால் உலக நாடுகளில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்பவர்கள் இவ்வாறான கோஷங்களை முன்னெடுப்பார்கள்.பின் காலப்போக்கில் அது இல்லாமற் போய்விடும்.

ஆகவே, ஏனைய நாடுகளைப்போல் இல்லாது இலங்கையில் இந்த செயற்றிட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதில் சுந்நுச்சூழல், சமூகம், பொருளாதாரம், அரச செயற்பாடு போன்ற 4 பிரிவுகளாகக் இந்த முன்னெடுப்புக்கள் காணப்படுவதாக கனடாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விரிவாக ஆராய்கையில்….

NO COMMENTS

Exit mobile version