உண்டியல் மற்றும் ஹவாலா பணப் பரிமாற்ற முறைகள் இலங்கையில் சட்டவிரோதமானவை அல்ல என்று பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (COPF) தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றிய அவர், எவ்வாறாயினும், இலங்கையில் எந்த வகையிலும் முறைமைகள் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த அமைப்புகளின் மூலம் சர்வதேச பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்கள் ஜூன் 2024 முதல் மே 2025 வரை 12 மாதங்களுக்குள் பதிவு செய்ய முன்மொழியப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
முன்மொழிவு
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மத்திய வங்கியிடம் COPF கோரியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, உண்டியல் மற்றும் ஹவாலா முறைகள் தொடர்பான முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
you may like this..
https://www.youtube.com/embed/qq5nESniLRQ