Home இலங்கை அரசியல் ஜனாதிபதி அநுரவிடம் சி.சிறீதரன் விடுத்த கோரிக்கை

ஜனாதிபதி அநுரவிடம் சி.சிறீதரன் விடுத்த கோரிக்கை

0

இனப்பிரச்சினையை தீர்க்க கிளீன் சிறீலங்கா போன்ற கிளீன் சிந்தனையைக் கொண்டு வர வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் (Kilinochchi) நேற்றைய தினம் (01.01.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் “நாட்டுக்கு வருகின்ற நிதிப்பாய்ச்சலை அதிகரிக்க வேண்டுமானால் நாட்டில் வேரூன்றிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற்றுத்தர வேண்டும்.

தமிழர்களின் நிதி உதவி

இலங்கையின் கைத்தொழில் துறையும் எதிர்பார்த்த இலாபத்தை அடையவில்லை.

இலங்கை அரசாங்கம் கிளீன் சிறீலங்கா போன்று புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கும் கிளீன் சிந்தனை திட்டத்தைக் கொண்டு வருமாக இருந்தால் உலகத்திலுள்ள தமிழர்களின் நிதி உதவியுடன் வடக்கு கிழக்கில் புதிய அபிவிருத்தியை உருவாக்கத் தயார்.

ஆனால் இலங்கையின் பொருளாதாரத்திலும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் இங்குள்ள பல தொழிற்சாலைகள் இன்னும் இயங்க முடியாதுள்ளது.

இவற்றிலிருந்து வெளியே வரவேண்டும். காவல்துறை, காணி அதிகாரங்களைத் தந்து நாங்கள் சுயாட்சியாக வாழ வழிவிடவேண்டும் என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version