பாதாள உலக குழு தலைவர் கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியான திலின சம்பத் என்கிற ‘வலஸ் கட்டா’ கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, மேற்கு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இலங்கையில் கெஹல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் வலையமைப்பை நிர்வகித்து வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பெருந்தொகை போதைப்பொருள்
தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியான ‘பஸ் தேவா’ வெளிப்படுத்திய தகவலின் படி இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கணேமுல்லவைச் சேர்ந்த 36 வயதான ‘வலஸ் கட்டா’ சீதுவவில் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், ரூ.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
