Home முக்கியச் செய்திகள் கொழும்பிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் சற்றுமுன் தீ பரவல்

கொழும்பிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் சற்றுமுன் தீ பரவல்

0

கொழும்பு 11,  பேங்க்ஷால் வீதியில்(Bankshall Street) உள்ள வியாபார நிலையம் ஒன்றில் தீ பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வியாபார நிலைய கட்டிடத்தில் ஏற்பட்ட தீப்பரவலுக்கான காரணம் இது வரை அறியப்படவில்லை என்பதுடன் காவல்துறையினர் சம்பவ இடத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தீ விபத்து

இதன்போது, பிளாஸ்டிக் பூக்கள் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள இடத்திலேயே தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

https://www.youtube.com/embed/1ZwvQfzuq_4

NO COMMENTS

Exit mobile version