Home முக்கியச் செய்திகள் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து விபத்து

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து விபத்து

0

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (02) அதிகாலை 3.45 இற்கு கம்பஹாவில் (Gampaha) இடம்பெற்றுள்ளது.

எனினும், இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பற்ற செயல்

அதிவேகமாக பயணித்த அதிசொகுசு பேருந்து மழை காரணமாக வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பேருந்து சாரதியின் இந்த பொறுப்பற்ற செயல் தொடர்பில் அந்த பேருந்தில் பயணித்தவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version