Home இலங்கை அரசியல் நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நாமலின் வழி: வெளியான தேர்தல் விஞ்ஞாபனம்

நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நாமலின் வழி: வெளியான தேர்தல் விஞ்ஞாபனம்

0

நாட்டை இலத்திரனியல் மயமாக்குவதன் மூலம் நாட்டின் பெரும்பாலான பிரச்சினைகளை தீர்க்க முடியும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் இன்று (02.09.2024) கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

“நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை எதிர்வரும் 10 ஆண்டுகளுக்குள் இரண்டு மடங்காக அதிகரிப்பதே எனது இலக்கு ஆகும்.

தேசிய அடையாள அட்டை

நாட்டின் பொருளாதாரத்தை வங்கி முறைமுக்குள் கொண்டு வருவதன் மூலம் 3 வருடங்களுக்குள் இலஞ்சம் மற்றும் ஊழலை நாட்டில் இருந்து இல்லாதொழிக்க முடியும்.

இலத்திரனியல் முறைமையின் மூலம் நாட்டின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு எம்மால் தீர்வு காண முடியும்.

தேசிய அடையாள அட்டையை இலத்திரனியல் மயமாக்குவதன் மூலம் வரி வருமானத்தை அதிகரிக்கவும் முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version