Home முக்கியச் செய்திகள் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு : காவல்துறையினரின் நடவடிக்கையால் பரபரப்பு!

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு : காவல்துறையினரின் நடவடிக்கையால் பரபரப்பு!

0

கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (12.04.2025) இரவு 12.35 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து காவல்துறையினர் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

தேடுதல் நடவடிக்கை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாகனமொன்றை கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலுக்கு அமைவாக, மட்டக்குளி பிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் வாகனத்தை நிறுத்த முயன்ற போது சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து காவல்துறையினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், சந்தேகநபர் வாகனத்​தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், காவல்துறையினர் வாகனத்தை கைப்பற்றியுள்ளதாகவும் தெரியவருகிறது.

சந்தேகநபரை கைது செய்வதற்காக காவல்துறையினர் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version