Home இலங்கை அரசியல் கொழும்பு மாநகர சபை அதிகாரிகளின் வித்தியாசமான நடத்தை..! மேயர் தெரிவில் குளறுபடி

கொழும்பு மாநகர சபை அதிகாரிகளின் வித்தியாசமான நடத்தை..! மேயர் தெரிவில் குளறுபடி

0

கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் அதிகாரிகள் வித்தியாசமான முறையில் நடந்துகொண்டதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை இன்றையதினம்(16.06.2025) சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கணடவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஏனைய சபைகளில் நடைபெற்ற மேயர் மற்றும் தவிசாளர் தெரிவுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

இரகசிய வாக்கெடுப்பு

எனவே, அங்கு நடைபெற்ற தெரிவுகளில் அதிகாரிகளின் நடத்தைகளை அவதானிக்க முடியாத நிலையே இருந்தது.

எனினும், கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவு நேரடியாக ஒளிபரப்பப்பட்டதால் அங்கு அதிகாரிகள் வித்தியாசமாக நடந்துகொண்டதை அவதானிக்க முடிந்தது.

அத்துடன், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது” எனத் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version