Home இந்தியா ஹஜ் பயணிகள் 250 பேருடன் வந்த விமானத்தில் பற்றிய தீயால் பதற்றம்

ஹஜ் பயணிகள் 250 பேருடன் வந்த விமானத்தில் பற்றிய தீயால் பதற்றம்

0

சவுதிக்கு(saudi) ஹஜ் புனித பயணம் சென்ற 250 பேருடன் வந்த விமானம் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கிய போது திடீரென விமானத்தின் சக்கரத்தில் புகை கிளம்பியதால் கடும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

 உத்தரப் பிரதேசம் மாநிலம், லக்னோவில் இருந்து சவுதிக்கு ஹஜ் புனித பயணம் சென்றிருந்த 250 பேருடன் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு ஜெட்டாவிலிருந்து லக்னோவுக்கு புறப்பட்டது.

விமானத்தின் இடது சக்கரத்திலிருந்து புகை மற்றும் தீப்பொறிகள் 

இந்த விமானம் நேற்று (ஜூன்.15) காலை 6.30 மணியளவில் லக்னோவின் சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் இடது சக்கரத்திலிருந்து புகை மற்றும் தீப்பொறிகள் உருவாகின.

இதனை தெரிந்துகொண்ட விமானி உடனே விமானத்தை நிறுத்தி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு வந்த மீட்பு குழுவினர் விமான சக்கரத்தில் உருவாகி இருந்த புகையை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விமானத்தில் இருந்த 250 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

அகமதாபாத் விமான விபத்தால் ஒருவித அச்சம்

இதற்கிடையே லக்னோ விமான நிலையத்தில் விமான சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய விமானம் மருத்துவ மாணவர் விடுதி கட்டடத்தில் விழுந்து நொறுங்கி ஏற்பட்ட கோர விபத்தில் 241 பயணிகளும், கட்டடத்தில் இருந்த 29 மாணவர்களும் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த துயர சம்பவத்தில் இருந்து விமான பயணம் மீது பலருக்கு ஒருவித அச்ச உணர்வும் ஏற்பட்டுள்ளது.

  

NO COMMENTS

Exit mobile version