Home இலங்கை இந்தியா – இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே இன பாம்பு தலை மீன்கள்

இந்தியா – இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே இன பாம்பு தலை மீன்கள்

0

இலங்கையிலும்(Sri lanka), இந்தியாவிலும் (India) உள்ள பாம்புத் தலை மீன்கள் மத்தியில், அதிகளவான மரபணு ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழு, இதனை அறிவித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பானது ஸ்பிரிங்கர் நேச்சரின் மதிப்புமிக்க மூலக்கூறு உயிரியல் அறிக்கைகள் என்ற இதழில்வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை மீனினங்கள்

இந்த கண்டறிதலின்படி நன்னீர் மீன் இனமான ‘சன்னா கெலார்டி’யின் உயிர் புவியியல் மற்றும் பரிணாம வரலாறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆய்வின்படி, இந்தியாவின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ‘சன்னா கெலார்டி’ இனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்து.

எனவே, இந்தியாவையும் இலங்கையையும் இணைத்த நிலப் பாலங்கள் அல்லது நன்னீர் பாதைகள் என்பனவே, சன்னா கெலார்டி போன்ற நன்னீர் மீன் இனங்கள், இரண்டு நாடுகளிலும் மரபணு ஓட்டத்தை பராமரித்திருக்கலாம் என்று, இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த பேராசிரியர்களும் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version