Home இலங்கை அரசியல் தேர்தலுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் ஆணையாளர் வழங்கியுள்ள உறுதி

தேர்தலுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் ஆணையாளர் வழங்கியுள்ள உறுதி

0

Courtesy: Sivaa Mayuri

அதிகளவான வேட்பாளர்கள் காரணமாக வாக்குச் சீட்டின் நீளம் அதிகரித்த போதிலும், எதிர்வரும் தேர்தலுக்கான மதிப்பிடப்பட்ட வரவு செலவுத் திட்டம் போதுமானதாக உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் 35ஆக இருந்த வேட்பாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 39 ஆக உயர்ந்துள்ளது.

இதன் விளைவாக, வாக்குச் சீட்டின் நீளம் 26 முதல் 27 அங்குலம் வரை நீண்டுள்ளது.

நிதி ஒதுக்கீடுகள்

இந்த மாற்றம் இருந்தபோதிலும், வாக்குச் சீட்டின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது என்று ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் வாக்குச் சீட்டின் நீளம் அதிகரிப்பது வாக்குச்சீட்டின் வடிவமைப்பையோ அல்லது செயற்பாட்டையோ பாதிக்காது என்றும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், நடப்பு தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகள், எந்தவொரு செலவையும் போதுமான அளவில் நிவர்த்தி செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version