Home இலங்கை அரசியல் திஸ்ஸ விகாரையில் முளைக்கும் புதிய புத்தர் சிலை – பாதுகாப்பு கோரி பறந்த கடிதம்

திஸ்ஸ விகாரையில் முளைக்கும் புதிய புத்தர் சிலை – பாதுகாப்பு கோரி பறந்த கடிதம்

0

எதிர்வரும் தைமாதம் மூன்றாம் திகதி பௌர்ணமி தினத்தில் வலி வடக்கு தையிட்டி
சட்டவிரோத திஸ்ஸ ராஜ மகா விகாரையில் புதிய புத்தர் சிலையை நிறுவுவதற்கான
ஏற்பாடுகள் முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், அதற்கான பாதுகாப்புஅனுமதி கோரி பாதுகாப்பு தரப்பினருக்கு மகா சங்கத்தினரால் எழுத்து மூலம் கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது 2026 தை மாதம் மூன்றாம் திகதி அன்று
காலை 10.00 மணிக்கு கன்யாசந்துவ தும்ரி ஸ்தாச சிதி ராஜ விஹாரையில் இருந்து
கொண்டு வரப்பட்டும் புத்தர் சிலை திஸ்ஸ ராஜ விஹாரையில் நிறுவப்படும்.

பக்தர்கள் பங்கேற்புடன் ஊர்வலம் 

இதற்காக, பக்தர்கள் மற்றும் பௌத்த துறவிகளின் பங்கேற்புடன் ஊர்வலம்
நடத்தப்படுவதோடு, அது தொடர்பில் தையிட்டி திஸ்ஸ விஹாரையின் தலைமை தேரருக்குத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் பங்கேற்பவர்கள் எந்த பயமோ சந்தேகமோ இல்லாமல் விகாரைக்குச் செல்ல
வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 காவல்துறையும் அதற்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு
மாதமும் பௌர்ணமி போயா தினத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதரீதியான பிரச்சனை

குறித்த விகாரை தனியாருக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதனை
அகற்ற வேண்டும் என வலிவடக்கு பிரதேச சபைகள் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் எந்த
ஒரு கட்டுமானங்களும் அங்கு இடம்பெறக் கூடாது என சபையால் விகாரதிபதிக்கு
எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.

இவ்வாறான ஒரு நிலையில் புதிய புத்தர் சிலையை வைப்பதற்கான ஏற்பாடுகள் முழு
வீச்சில் இடம்பெற்று வரும்போது மதரீதியான பிரச்சனையை ஏற்படுத்துவதற்கான
சூழ்ச்சியான சந்தேகம் வெளியிடப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version