Home இலங்கை சமூகம் வசந்த சமரசிங்கவுக்கு எதிராக இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வசந்த சமரசிங்கவுக்கு எதிராக இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

0

வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் முன் இன்று (30) குறித்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

உப்பு இறக்குமதியில் மோசடி நடந்ததாகக் குற்றம் சாட்டி, பல சிவில் சமூக அமைப்புகள் இலஞ்ச வழிப்பு ஆணையத்திடம் இந்தப் முறைபாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சிவில் சமூக அமைப்புகள்

சுமார் 75 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உப்பு, தற்போது சந்தையில் சுமார் 320 ரூபாய்க்கு விற்கப்படுவதாக சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அதன்படி, உப்பு இறக்குமதி மூலம் பல பில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்புகள் மேலும் தெரிவித்தன.  

NO COMMENTS

Exit mobile version