ஹபரணை-திருகோணமலை பிரதான வீதியில் பயங்கர வெடிபொருள் ஒன்றுடன் லொரி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஹபரணை காவல்துறையினர் அதில் 156.07 கிராம் C4 எனற உயர் சக்தி கொண்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பிரதான வீதியில் உள்ள நாற்சந்தி காவல்துறை சோதனை சாவடியில் (29) சந்தேகத்துக்குரிய லொரி நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இது கண்டறியப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், குறித்த லொரி காலி லபுடுவாவிலிருந்து கந்தளாய்க்கு 59 வயதுடைய சாரதியால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது வாகனத்தில் வெடிபொருட்கள் இருப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், யாரோ ஒருவர் அவற்றை அங்கு ரகசியமாக மறைத்து வைத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் லொரியும் இன்று (30) பக்கமுன சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.
இது தொடர்பில் ஹபரணை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
