எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைகேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 03ம் திகதி தொடக்கம் இதுவரை சுமார் 292 தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
முறைப்பாடுகள்
இவற்றில் 74 முறைப்பாடுகள் குற்றவியல் நடவடிக்கைகளுடன் தொடா்புடைய முறைப்பாடுகளாகும்.
அத்துடன் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பாக இதுவரை 124 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
