Home இலங்கை சமூகம் இந்த ஆண்டில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இந்த ஆண்டில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

0

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

அதன்படி, மார்ச் மாதம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000 ஐ கடந்துள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் மார்ச் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் அதிகரிப்பு 

அத்துடன் இந்த வருடத்தில் இதுவரை 690,000க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 14% வளர்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் 53,111 சுற்றுலாப் பயணிகளும், இரண்டாம் வாரத்தில் 52,459 சுற்றுலாப் பயணிகளும், மூன்றாம் வாரத்தில் 51,459 சுற்றுலாப்பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் மார்ச் மாதத்தில் 22 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று குறைவைப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வாரத்தில் 34,771 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version