Home உலகம் தொடரும் ரஷ்ய-உக்ரைன் போர்: சுவிட்சர்லாந்தில் ஒன்று கூடியுள்ள 90 நாடுகளின் பிரதிநிதிகள்

தொடரும் ரஷ்ய-உக்ரைன் போர்: சுவிட்சர்லாந்தில் ஒன்று கூடியுள்ள 90 நாடுகளின் பிரதிநிதிகள்

0

ரஷ்ய – உக்ரைன் போரை (Russo-Ukrainian war) முடிவுக்கு கொண்டு வர சுவிட்சர்லாந்தில் சர்வதேச அமைதி மாநாடு நடைபெற்று வருகிறது.

சுவிட்சர்லாந்தில் (Switzerland) நடைபெறும் இந்த மாநாட்டில் 90 நாடுகளின் அரசுத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மட்டுமல்லாது பல சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

குறித்த மாநாட்டில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும் (Volodymyr Zelenskyy) கலந்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்ப்பு

இதேவேளை, அமைதி மாநாட்டிற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin)மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping) அழைக்கப்படவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், ரஷ்ய அதிபர் புடின் அமைதி திட்டமொன்றை உச்சிமாநாட்டில் முன்வைத்துள்ளதாகவும் ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் அந்த அமைதி திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version