Home இலங்கை அரசியல் நுவரெலியாவிற்கு நேரடி கள விஜயம் மேற்கொண்ட ஜீவன் தொண்டமான்

நுவரெலியாவிற்கு நேரடி கள விஜயம் மேற்கொண்ட ஜீவன் தொண்டமான்

0

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பிரதேச சபைக்கு உபட்ட முள்ளுகாமம், லக்ஸபான, வாழமலை,ஸ்ரஸ்பி,ஸ்டொக்கம் ஆகிய தோட்டப்புறங்களுக்கு நேரடி கள விஜயத்தை அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயமானது நேற்று (15.06.2024) இடம்பெற்றுள்ளதுடன், மஸ்கெலியா பிரதேச சபைக்கு உபட்ட மக்களை சந்தித்து அவர்களின் நலன் பற்றி விசாரித்ததுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கேட்டறிந்து கொண்டார்.

மக்களின் அபிலாசைகள் 

குறிப்பாக நாளாந்த சம்பளம், காணி உரிமை, வீடமைப்பு , எதிர்கால மக்கள் பொருளாதார மேம்பாடு தொடர்பாக விரிவாக கருத்துரைத்தார்.

நாள் சம்பளம் 1700 ரூபாய் வழங்குவதற்காக தேயிலை பறிக்கும் அளவினை தீர்மானிப்பது குறித்த தோட்ட மக்களே அன்று, எவ்விடத்திலும் நான் இத்தனை கிலோ தேயிலைக் கொழுந்துதான் பறிக்க வேண்டும் என தெரிவிக்கவில்லை என்றும் எவ்வித ஒப்பந்தங்களிளும் கைச்சாத்திடவில்லை என அமைச்சர் தெரிவித்தார். 

மாற்று தொழிற்சங்கங்கள் பெருந்தோட்ட நிறுவனங்களை கண்டு அஞ்சும் வேளையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரமே மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றி வருதாகவும், எக்கட்டத்திலும் எனது சமூகத்திருடன் இனைந்து நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்

மேலும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் கணிசமாக வாழக்கூடிய இக்காலக்கட்டத்தில் அவர்களுக்காக வெறுமனே 14000 வீடுகளை மாத்திரம் நிர்மாணித்து வழங்குவது கண்துடைப்பு என்றும், இதற்காக அனைவரினதும் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதற்காகவே காணி உரிமையை வழங்கும் வேலைத்திட்டத்தினை தான் அமைச்சினூடாக ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

இதன்போது மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுள், உடனடியாக தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகளை விரைவில் தீர்க்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

இந்த சந்திப்பில் இ.தொ.கா தேசிய அமைப்பாளர் சக்திவேல், சிரேஷ்ட இயக்குனரும் தொழிற்சங்க தேசிய அமைப்பாளருமான லோகதாஸ், முன்னாள் மஸ்கெலியா பிரதேச சபை தலைவர் சென்பகவள்ளி, அமைச்சரின் ஒருங்கினைப்பு செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் உட்பட பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர். 

NO COMMENTS

Exit mobile version