Home இந்தியா கேரள மாநில தாதியின் மரண தண்டனை இரத்து செய்யப்படவில்லை : புதிய அறிவிப்பால் பரபரப்பு

கேரள மாநில தாதியின் மரண தண்டனை இரத்து செய்யப்படவில்லை : புதிய அறிவிப்பால் பரபரப்பு

0

  கேரள மாநிலத்தை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் நாட்டில் விதிக்கப்பட்ட மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டதாக இன்று(29) காலை முதல் பரவலாக செய்திகள் வெளியான நிலையில், கொல்லப்பட்ட மெஹ்தியின் சகோதரர் இந்த கருத்தை மறுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டதாக கூறுவதில் உண்மை இல்லை என்றும், நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையை ஏமன் அரசு மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இதுவரை வெளியிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவந்திருக்கும் தகவல் உண்மை இல்லை

 நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ரத்தப் பணம் வாங்குவது குறித்து எந்தவித ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை. விரைவாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே கோரிக்கை. ரத்து செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் உண்மை இல்லை,” என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏமன் நாட்டின் சட்டமா அதிபருக்கு ஒரு கடிதத்தையும் எழுதியிருப்பதாகவும், தங்கள் சகோதரரின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம் என்றும் மெஹ்தியின் சகோதரர் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version