Home இலங்கை அரசியல் வவுணதீவில் ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத்திட்டம்

வவுணதீவில் ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத்திட்டம்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் 20இலட்சம் அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத்திட்டத்தின்
கீழ் மூன்றாவது கட்ட நிகழ்வுகள் வவுணதீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது, ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் டி.தயானந்தன்
தலைமையில் இன்று(17) நடைபெற்றுள்ளது.

20இலட்சம் அங்கத்தவர்கள்

கடந்த ஜுன் மாதம் 07ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய
மக்கள் சக்தியின் 20இலட்சம் அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத்திட்டம் நாடளாவிய
ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில், இதன் மூன்றாம் கட்ட நிகழ்வுகள் இன்றைய தினம்(17) மகிழவெட்டுவான் பொதுச்சந்தை
மற்றும் கிராமங்கள் தோறும் வீடுகளில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்து
ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஒரு தொகுதியினருக்கான அங்கத்துவ உரிமங்களும் தொகுதி
அமைப்பாளரினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் பாரியளவிலான வீட்டுத்திட்டத்தினை
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்னெடுத்திருந்த நிலையில் மீண்டும் அவர்
ஜனாதிபதியாக பதிவியேற்கும்போது அந்த வேலைத்திட்டங்களை தொடரவுள்ளதாக
உறுதியளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர்
டி.தயானந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,சிலர் தேர்தல் காலங்களில் இனவாதங்களை பயன்படுத்தி ஆட்சியதிகாரங்களை கைப்பற்ற
நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் வவுணதீவு பிரதேச உபஅமைப்பாளர் ஜெயக்குமார் மற்றும் கிராமிய
மட்ட தலைவர்கள்,மகளிர் அணி உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version