Home இலங்கை அரசியல் சட்டமா அதிபரின் பதவிக் கால நீடிப்பு பரிந்துரை அரசமைப்பு சபையால் மீண்டும் நிராகரிப்பு

சட்டமா அதிபரின் பதவிக் கால நீடிப்பு பரிந்துரை அரசமைப்பு சபையால் மீண்டும் நிராகரிப்பு

0

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரை நேற்று (26) நடந்த அரசமைப்பு சபைக் கூட்டத்தில் வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது எதிராக 5 வாக்குகளும், ஆதரவாக 3 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் குறித்த பரிந்துரை மீண்டும் நிராகரிக்கப்பட்டது.

இதேவேளை, அரசமைப்பு சபையின் முடிவைப் புறந்தள்ளி சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அனுமதியை வழங்கியுள்ளார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/constituent-rejects-proposal-of-attorney-general-1719449747

NO COMMENTS

Exit mobile version