Home இலங்கை அரசியல் மது உரிமங்கள் வழங்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை

மது உரிமங்கள் வழங்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை

0

Courtesy: Sivaa Mayuri

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சட்ட விரோதமாக அதிகளவான மது அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் கூற்றுக்கள் பொய்யானவை என, மதுவரித்திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் அரசாங்கத்தின் கொள்கை முடிவிற்கு இணங்க 172 மது உரிமங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஈட்டப்பட்ட வருமானம் 

மேலும், வழங்கப்பட்ட இந்த 172 அனுமதிப்பத்திரங்கள் மூலம் 2.2 பில்லியன் ரூபாய்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வரி நிலுவைகளை நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version