ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகள் மற்றும் அவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுண ஆரச்சி வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சி அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றின்போதே குறித்த பட்டியலை அவர் வாசித்துக் காட்டியுள்ளார்.
பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் வாதிகளின் பெயர்களாக, மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு 6 வழக்குகளும் முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்சவுக்கு 7 வழக்குகளும் உள்ளன.
பட்டியல்
யோசித்த ராஜபக்ச, டேசி பொரஸ்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சிரந்தி ராஜபக்ச, நிசாந்த விக்ரமசிங்க,
முன்னாள் பிரதியமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுறை சந்திரகாந்தன், பிரசன்ன ரனவீர, நகரசபை உறுப்பினர் மில்ரோய், மேர்வின் சில்வாவின் முன்னாள் செயலாளர், சிங்கப்பூர் சரத், பிள்ளையானின் சாரதி, எஸ்.எம்.ரஞ்சித், சிறையில் உள்ள எஸ்.எம்.சந்திரசேனவின் மனைவி ஆகியோரும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
அத்துடன், எஸ்.எம்.சந்திரசேன, மகிந்தானந்த அளுத்கமகே,
முன்னாள் வர்த்தக வாணிபத் துறை அமைச்சர் நளீன் பண்டார,
வேறு வழக்கில் சிறையில் உள்ள ரோஹித்தவின் மருமகன், பிணையில் உள்ள துமிந்த திசாநாயக்க ஆகியோருக்கு எதிராகவும் வழக்குகள் உள்ளன.
மேலும், கெஹலியவின் இணைப்புச் செயலாளர், மேர்வின் சில்வா, கெஹலிய ரம்புக்வெல மற்றும் அவர்களின் குடும்பத்தினலும் பட்டியலில் உள்ளனர்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், லொஹானின் மனைவி, ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, உள்ளுராட்சி உறுப்பினர் சுலோச்சன, வித் விஜித முனித செய்சா, அநுர பிரயதர்ஸன யாப்பா மற்றும் மனைவி, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் சாந்த அபேசேக்கரவின் மகன், புதிய வழக்கில் மகிந்தானந்த அளுத்கமகே, லிந்துல நகரசபையின் முன்னாள் மேயர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சின் வாஸ் ஆகியோரும் பட்டியலில் அடங்குவார்கள்.
