நடிகர் சிங்கமுத்து தன்னை பற்றி பேட்டிகளில் மிகவும் அவதூறாக பேசி வருகிறார் என வடிவேலு வழக்கு தொடுத்து இருக்கிறார்.
5 கோடி நஷ்டஈடு கேட்டு வடிவேலு வழக்கு போட்டிருக்கும் நிலையில், அதன் விசாரணை நடைபெற்று வருகிறது.
நீதிமன்றம் உத்தரவு
வழக்கு தொடுத்த பிறகும் சிங்கமுத்து youtube பேட்டிகளில் தன்னை பற்றி மிகவும் அவதூறாக தொடர்ந்து பேசுகிறார் என வடிவேலு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது.
இதற்கு நீதிமன்றம் சிங்கமுத்துவுக்கு அதிரடியாக தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. வடிவேலு பற்றி அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேச கூடாது என்றும், ஏற்கனவே வெளியான வீடியோக்களை நீக்கும்படி சிங்கமுத்து அந்தந்த சேனல்களுக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதி உத்ரவிட்டு இருக்கிறார்.