2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் தொடர்பான தீர்மானம் இன்று நாடாளுமன்றில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்வரும் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்காக இடைக்கால வரவு செலவுத்திட்டம் கடந்த 03ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
தீர்மானம்
அதற்கான விவாதம் நேற்றும் இன்றும் (06) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 5.30 வரை நாடாளுமன்றில் நடைபெற்றது.
அதன்படி இன்றைய விவாதத்தின் பின்னர் வரவு செலவுத்திட்ட தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.