வடக்கு – தெற்கு இடையே இனவாதத்தை தோற்றுவிக்க முயற்சிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(04) அமர்வின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,“என்னுடைய அரசியல் வாழ்வில் நான் இனவாத்தை முன்னிருத்தி செயற்படவில்லை.
நாட்டில் இனவாதம்
ஜனாதிபதி தனது உரையில், இனவாத்தை நிராகரிப்பதாக தெரிவித்தார்.
எல்லோருக்கும் இறந்தவர்களை நினைவு கூற உரிமை இருக்கின்றது.
வடக்கிலும் தெற்கிழும் வழக்கு பதிவு செய்யும் போது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து ஆலோசனை பெற்றக்கொண்டு அதற்கமைவாக வழக்கு தாக்கல் செய்யுங்கள் என கூறினேன்.
அத்துடன், இனவாதத்தை ஒழிப்பதற்கு சரியான தீர்மானம் எடுக்க வேண்டும்.”என அவர் குறிப்பிட்டுள்ளார்.